வரலாறு காணாத எழுச்சியில் பங்குச்சந்தை!

வரலாறு காணாத அளவுக்கு சென்செக்ஸ் புள்ளிகள் இன்றைய நாள் முடிவில் 30,000 புள்ளிகளை கடந்தது. நிஃப்டியும் முதன்முறையாக 9,351 புள்ளிகளை எட்டியது. இன்று பங்குச்சந்தையின் வரலாறு காணாத எழுச்சியை அடுத்து மும்பையில் உள்ள பி.எஸ்.இ அலுவலகத்தில், சந்தை நேர முடிவின்போது பலூன்கள் பறக்கவிடப்பட்டும் கேக் வெட்டியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 

இன்றைய நாள் முடிவில் சென்செக்ஸ் 0.63 சதவிகிதம் உயர்ந்து 30,133 புள்ளிகளை எட்டியது. அதேபோல நிஃப்டியும் 0.49 சதவிகிதம் உயர்ந்து 9,351 புள்ளிகளைத் தொட்டது.

மேலும், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 63.99 ரூபாயாக உயர்ந்துள்ளது.   

Do you like the story?

Please Appreciate the Author by clapping!