Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஜம்மு - காஷ்மீரில் இணைய சேவை முடக்கம்..!

ஜம்மு - காஷ்மீரில் ஒரு மாதத்துக்கு இணைய சேவை முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

aa

காஷ்மீரில் பதற்றமான சூழல் சில மாதங்களாக நிலவி வருகிறது. அரசாங்கங்கள் மாறிய போதும், அமைதி மட்டும் அங்கே திரும்புவதில்லை. மேலும், அண்மைக் காலமாக காவல் படையினருக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. போராட்டக்காரர்கள் கல் எறிவதும், காவல் படையினர் பெல்லட் குண்டுகளை சுடுவதும் வாடிக்கையாகிவிட்டது.

இந்நிலையில், சமூக வலைதளங்கள் மூலம் தான் போராட்டத்தில் ஈடுபடுவோர்கள் ஒன்றிணைவதாக தொடர்ந்து கூறப்பட்டு வந்தது. இதையடுத்து, காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் ஒரு மாதத்துக்கு இணைய சேவை முடக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ட்விட்டர், ஃபேஸ்புக், யூ-டியுப் உள்ளிட்ட சமூக உடகங்களின் சேவை தடை செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும், அண்மையில் நடந்து கல் வீச்சு தாக்குதலுக்கு வாட்ஸ்அப் மூலம் ஆட்கள் சேர்க்கப்பட்டதாக காவல்துறை குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement