வெளியிடப்பட்ட நேரம்: 15:45 (27/04/2017)

கடைசி தொடர்பு:16:11 (27/04/2017)

ரயில்வே துறை தனியார் மயமாக்கப்படுகிறதா? ரயில்வே அமைச்சரின் உறுதியான பதில்!

இந்திய ரயில்வேத்துறை தனியார்மயமாக்கப்பட மாட்டாது என ரயில்வேத்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு உறுதியாகத் தெரிவித்துள்ளார். 

Suresh prabhu
 

ரயில்வேத்துறை முழுமையாக தனியார்மயமாக்கப்பட உள்ளதாக நீண்ட நாள்களாக தகவல் பரவிவருகிறது. இதுகுறித்து ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்குப் பதிலளித்த அமைச்சர், “ரயில் நிலையங்களின் சுகாதாரத்தையும் தூய்மையையும் மேம்படுத்தும் வகையில் தனியாருக்கு அனுமதி அளிக்கப்படும். ஆனால், ரயில்வே தனியார் மயமாக்கப்படாது.

சமூகத்தில் அனைத்து நிலையில் உள்ள மக்களும் ரயில்வே சேவையைப் பயன்படுத்தும் வகையில்தான் ரயில் கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு வருகின்றன. தனியார் மயமாக்கப்படுவது மக்களுக்கு எதிரானது. தனியார் மயமாக்கப்பட்டால்தான் ரயில்வேத்துறையின் தரம் உயரும் என்று சொல்வது தவறு. தற்போது இந்திய ரயில்வேத்துறை தொழில்நுட்ப ரீதியில் வளர்ச்சியைக் கண்டுள்ளது” என்றார். 
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க