முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சருக்கு உலக சுகாதார அமைப்பு விருது! | WHO award for Ex- Health Minister CP Thakur

வெளியிடப்பட்ட நேரம்: 19:06 (27/04/2017)

கடைசி தொடர்பு:19:05 (27/04/2017)

முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சருக்கு உலக சுகாதார அமைப்பு விருது!

இந்தியாவின் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும், பாஜக எம்.பி-யும் ஆன சி.பி. தாக்கூருக்கு உலக சுகாதார நிறுவனம் ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ அளித்து கவுரவித்துள்ளது.

இந்தியாவின் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.பி. தாக்கூர் மருத்துவத் துறையில் சாதனை புரிந்ததற்காக இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. ‘லஷ்மேனியா’ என்னும் ஒரு வகை தொற்று நோய் குறித்த ஆராய்ச்சியில் சிறப்பாகப் பணிபுரிந்தமைக்காக உலக சுகாதார நிறுவனம் இவ்விருதினை வழங்கியுள்ளது.

 C P Thakur

வாஜ்பாய் பிரதமராகப் பதவி வகித்த காலத்தில் சுகாதாரத்துறை அமைச்சராகப் பதவி வகித்த தாக்கூர், ஒரு சிறந்த மருத்துவரும் கூட. உலக சுகாதார நிறுவனத்தால் மருத்துவத்துறை ஆராய்ச்சியில் விருது பெறும் முதல் இந்தியர் தாகுர் ஆவார். இவரது சிறப்பான செயல்பாட்டுக்காக ஸ்பெயின் நாட்டில் உள்ள லஷ்மேனியா அறிவியல் ஆராய்ச்சி மையத்தால் சிறப்புரையாற்றவும், ஐந்து நாள் சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்தவும் அழைக்கப்பட்டுள்ளார்.