வெளியிடப்பட்ட நேரம்: 00:36 (28/04/2017)

கடைசி தொடர்பு:00:35 (28/04/2017)

விவசாயிகளும் வருமான வரி கட்ட வேண்டும் - விவேக் தேப்ராய்


விவசாயம் மூலம் கிடைக்கும் வருவாய்க்கும் வருமான வரி விதிக்கப்பட வேண்டும் என்று நிதி ஆயோக் அமைப்பின் உறுப்பினர் விவேக் தேப்ராய் தெரிவித்துள்ளார். 


வருமான வரி வரம்புக்குள் வருவோரின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதற்கான கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பேசிய நிதி ஆயோக் அமைப்பின் உறுப்பினர் விவேக் தேப்ராய், 'வருமான வரி விதிப்பில் கிராமம், நகரம் மற்றும் விவசாயிகள் மற்றவர்கள் என்ற பாகுபாடு பார்க்கக் கூடாது. விவசாயம் மூலம் கிடைக்கும் வருவாய்க்கும் வருமான வரி விதிக்கப்பட வேண்டும்' என்று தெரிவித்தார். கடந்த பட்ஜெட் உரையில் பேசிய மத்திய நிதிஅமைச்சர் அருண்ஜெட்லி, 'விவசாய வருமானத்தின் மீது வரி விதிக்கும் திட்டம் இல்லை' என்று பேசியிருந்தார். ஆனால் தற்போது விவேக் தேப்ராய் விவசாயம் மூலம் வரும் கிடைக்கும் வருவாய்க்கும் வருமான வரி விதிக்கப்பட வேண்டும் கூறியுள்ளார்.