வெளியிடப்பட்ட நேரம்: 10:55 (28/04/2017)

கடைசி தொடர்பு:12:21 (28/04/2017)

கர்நாடகா முதலிடம்; தமிழ்நாடு மூன்றாம் இடம்! எதில் தெரியுமா?

பொதுச் சேவைகளைப் பயன்படுத்துவதில், அதிக அளவில் ஊழல் மலிந்துகிடக்கும் மாநிலங்களில், கர்நாடகா முதலிடத்தில் உள்ளது; இந்தப் பட்டியலில் தமிழகத்துக்கு மூன்றாவது இடம்.

ஊழல்


ஊடக ஆய்வுகள் மையம், ‘ஊழல் ஆய்வு- 2017’ என்ற தலைப்பில் நடத்திய ஆய்வில், ஊழலில் கர்நாடகா முதலிடம் வகிப்பதாக ஆய்வ றிக்கை கூறுகிறது. 20 மாநிலங்களில் நடந்த இந்த ஆய்வில், சர்வே அடிப்படையில் ஆராய்ந்து முடிவினை வெளியிட்டுள்ளனர். 
 ஊழல் மலிந்த மாநிலங்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் ஆந்திரப்பிரேதசமும், மூன்றாவது இடத்தில் தமிழகமும் உள்ளது. கடந்த ஒரு வருடமாக, கிராமங்கள் மற்றும்  நகரப் பகுதிகளில்  நடத்திய சர்வே முடிவுகள் இந்தத் தகவல்களை அளித்துள்ளன.

இதேபோல 2005ஆம் ஆண்டு, இதற்கு முன்னர் நடந்த சர்வேயில் பீகார் முதலிடத்திலும், தமிழ்நாடு ஐந்தாம் இடத்திலும் இருந்தது குறிப்பிடத்தக்கது. ‘ஊடக ஆய்வுகள் மையம்’ நடத்திய இந்த ஆய்வில், பொதுச் சேவைகளைப் பயன்படுத்தும்போது நடக்கும் ஊழல்கள் மற்றும் பணமதிப்பீட்டு நடவடிக்கைகள், கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் வெகுவாகக் குறைந்திருந்ததாகக் குறிப்பிட்டுள்ளனர்.

'இந்த அறிக்கை முடிவுகள்குறித்து, சட்டக் கொள்கைகள் மேற்கொள்ளும் நிதி ஆயோக் கவனிக்க வேண்டும் என, ஊடக ஆய்வுகள் மையம் குறிப்பிட்டது. அதற்கு, நிதி ஆயோக் உறுப்பினர் பிபேக் தேபராய், ‘இந்த மாதிரியான ஊழல்கள், தேர்தல் சீர்திருத்தங்களுடன் தொடர்புடையன’ என்றார்.