உ.பி. பள்ளியின் வித்தியாசமானக் கட்டளை! கொந்தளித்த பெற்றோர்கள்!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பள்ளி நிர்வாகம் ஒன்று தன்னுடைய மாணவர்களை முதல்வர் யோகி ஆதித்யநாத் போல் முடி வெட்டி வரவேண்டும் என உத்தவிட்டது இன்று பரபரப்பை ஏற்படுத்தியது.

யோகி ஆதித்யநாத்

உ.பி-யில், மீரட் நகரில் உள்ள ஒரு பள்ளியில் மாணவர்கள் அம்மாநில முதல்வரைப் போலவே முடிவெட்டி வர உத்தரவிட்டுள்ளனர். இதனால் கோபமடைந்த சில பெற்றோர்கள் இன்று பள்ளியை வந்து முற்றுகையிட்டனர்.

உ.பி. முதல்வர் போல் முடிவெட்டி வந்தால் தான் பள்ளியில் அனுமதிக்கப்படுவர் என்ற உத்தரவினை எதிர்த்து பெற்றோர்கள் பள்ளியினை முற்றுகையிட போலீஸ் தலையிட்டு சமாதானப்படுத்தினர். மேலும், பள்ளிக்கு அசைவ உணவு கொண்டு வரக்கூடாது என்ற உத்தரவும் விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளி நிர்வாகம் கூறுகையில், ’முறையாக உடை அணிந்து ஒழுக்கமான முறையில் முடிவெட்டி வர வேண்டும்’ என்றுதான் சொன்னதாகக் குறிப்பிட்டுள்ளனர். அசைவ உணவு நடைமுறை எப்போதும் பள்ளிகளில் பின்பற்றப்படும் ஒரு விதிதான் என்று கூறியுள்ளது. இம்மாதிரியான சின்னப் பிரச்னைகளுக்கு மதச்சாயம் பூசுவது சரியல்ல என்றும் பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!