ஹாரன் அடித்ததால் மிரண்டு ஓடிய பசு; டிரைவரின் கண்பார்வையைப் பறித்த மாட்டுக்காரர்!

பாட்னா அருகே உள்ள ஒரு கிராமத்தில், சாலையில் சென்றுகொண்டிருந்த பசுவை விரட்ட, ஓட்டுநர் ‘ஹார்ன்’ அடித்ததற்காக அவரை மாட்டுக்காரர் தாக்கியுள்ளார். இந்தத் தாக்குதல் சம்பவத்தில், வேன் ஓட்டுநரின் கண்பார்வை பறிபோனது.

லாரி

பீகார் மாநிலத்திலுள்ள மைனா கிராமத்தில், வேன் ஓட்டுநர் ஹாரன் அடித்த ஒரே காரணத்துக்காகத் தாக்கப்பட்டுள்ளார். பாட்னா அருகேயுள்ள தேசிய நெடுஞ்சாலை 107-ல், வேன் ஓட்டிச்சென்ற கணேஷ் மண்டல் (30), சாலையில் சென்றுகொண்டிருந்த பசுவை விரட்ட, ‘ஹாரன்’ அடித்துள்ளார். இதில் மிரண்ட பசு, சாலையைக் கடந்து ஓடியுள்ளது. பசுவைப் பயமுறுத்தியதற்காக ஆத்திரமடைந்த மாடு மேய்ப்பவர், அந்த வேன் ஒட்டுநரைத் தாக்கியுள்ளார். இதில் மயக்கமடைந்த கணேஷ் மண்டல், அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டார். இந்தத் தாக்குதலில் அவருக்கு இடது கண்பார்வை பறிபோனது.

இதுகுறித்து சோன்பர் ராஜ் போலீஸ் நிலைய காவல்துறையினர் விசாரித்துவருகின்றனர். தாக்குதலில் பாதிக்கப்பட்ட ஓட்டுநர், தற்போது மேல் சிகிச்சைக்காக சகஸ்தா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் கொடுத்த புகாரின் பேரில், மாடு மேய்ப்பவரிடம் விசாரணை நடந்துவருகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!