Published:Updated:

`தேவையான நேரத்தில் உதவுவதே நட்பு!’ -துபாய் சென்றடைந்த 88 இந்திய செவிலியர்கள் #Covid19

துபாய் செல்லும் செவிலியர்கள்
துபாய் செல்லும் செவிலியர்கள் ( twitter\@cgidubai )

கடந்த சனிக்கிழமை, 180 பயணிகள் ஷார்ஜாவிலிருந்து இந்தியா திரும்பிய நிலையில், அதே தினத்தில் 88 செவிலியர்கள் முதற்கட்டமாக இந்தியாவிலிருந்து துபாய் சென்றிருக்கிறார்கள்.

உலக அளவில் கொரோனா வைரஸ் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துவருகிறது. எனினும், தொடர்ச்சியாக ஊரடங்கில் சில தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், உலக நாடுகளில் இந்தியர்கள் பலர் கொரோனா ஊரடங்கு காரணமாக வேலைகளை இழந்தும், ஊருக்குத் திரும்ப முடியாத சூழலில் சிக்கித் தவிக்கின்றனர்.

அமீரகத்திலிருந்து இந்தியா திரும்பும் மக்கள்
அமீரகத்திலிருந்து இந்தியா திரும்பும் மக்கள்
twitter\@cgidubai

இந்த நிலையில் இந்திய அரசு, வெளிநாடுகளில் சிக்கி இருப்பவர்களை மீண்டும் இந்தியாவுக்கு அழைத்துவரும் முயற்சிகளில் இறங்கியது. குறிப்பாக ஷார்ஜா, துபாய், உள்ளிட்ட அமீரக நாடுகளில் இருந்தும் சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் இந்தியர்களை மீட்டுக் கொண்டுவர திட்டமிடப்பட்டு, தற்போது அது செயல்படுத்தப்பட்டுவருகிறது.

பலரும் சொந்த ஊர் திரும்புவதை எதிர்நோக்கியுள்ள நிலையில், கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் முன்னின்று போராட, இந்தியாவிலிருந்து 88 செவிலியர்கள் முதற்கட்டமாக துபாய் விமான நிலையம் சென்றடைந்திருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் அவசர சிகிச்சைப் பிரிவு மையத்தில் பணியற்றிய அனுபவம் கொண்ட செவிலியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

துபாய் செல்லும் செவிலியர்கள்
துபாய் செல்லும் செவிலியர்கள்
twitter\@cgidubai

துபாய் சுகாதார ஆணையத்தின் இயக்குநர் ஜெனரல், ஹுமைத் அல் கடாமி கூறுகையில், ``இந்த ஒரு விஷயம் இரு நாடுகளுக்கிடையேயான உறவை வெளிக்காட்டுவதாக இருக்கிறது. துபாய் நாட்டில் போதுமான வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளன. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உலகத் தரம் வாய்ந்த சிகிச்சை வழங்கப்படுகிறது” என்றார்.

அமீரக நாடுகளுக்கான இந்தியத் தூதர் பவன் கபூர், ``இந்தியா மற்றும் அமீரக நாடுகள் நல்ல உறவைக் கொண்டுள்ளது. கொரோனாவுக்கு எதிரான கள நடவடிக்கைகளிலும் நாடுகள் உறுதியான இணைப்பைக் காட்டியுள்ளன. இரு நட்பு நாடுகளுக்கிடையேயான சிறந்த விஷயமே, தேவையான நேரத்தில் உதவுவதுதான்” என்றார்.

துபாயில் இந்திய செவிலியர்கள்
துபாயில் இந்திய செவிலியர்கள்
twitter\@cgidubai

கடந்த சனிக்கிழமை, 180 பயணிகள் ஷார்ஜாவிலிருந்து இந்தியா திரும்பிய நிலையில், அதே தினத்தில் 88 செவிலியர்கள் முதற்கட்டமாக இந்தியாவிலிருந்து துபாய் சென்றிருக்கிறார்கள். கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில், உலக நாடுகள் இணைந்து செயல்பட்டால் மட்டுமே வெல்ல முடியும் என்கிறது உலக சுகாதார நிறுவனம். ஏற்கெனவே இந்தியா 100 நாடுகளுக்கு மேல், மருந்துகளை வழங்கி உதவியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு