எஸ்.பி.ஐ ஏ.டி.எம்மில் காந்திப் படம் இல்லாத 500 ரூபாய் நோட்டுகள்

பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாத என்ற அறிவிப்பை, பிரதமர் மோடி கடந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதி வெளியிட்டார். இதைத்தொடர்ந்து, புதிய 2,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் புழக்கத்துக்கு விடப்பட்டன. புதிய நோட்டுகள் விடப்பட்டது முதலே, அதன் கள்ள நோட்டுகளும் வெளியாகி வருகின்றன.

500 Rs note without Gandhi image
 

குறிப்பாக, புதிய ரூபாய் நோட்டுகள் சில அச்சுப்பிழைகளுடன் வெளியாகி வருகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன், காந்திப்படம் இல்லாத 2,000 ரூபாய் நோட்டுகள் மத்தியப் பிரதேசத்தின் எஸ்.பி.ஐ வங்கியில் விநியோகிக்கப்பட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதே போன்று ஒரு சம்பவம் தற்போது, மீண்டும் மத்தியப் பிரதேசத்தில் நடந்துள்ளது. 


இம்முறை எஸ்.பி.ஐ ஏ.டி.எம் ஒன்றில் காந்திப் படம் இல்லாத 500 ரூபாய் நோட்டுகள் வந்துள்ளன. இதனால் பணம் எடுத்த அந்த நபர் அதிர்ச்சியடைந்துள்ளார்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!