இந்தியா வந்தார் துருக்கி அதிபர் | Turkey's president Erdogan arrives India

வெளியிடப்பட்ட நேரம்: 06:11 (01/05/2017)

கடைசி தொடர்பு:06:11 (01/05/2017)

இந்தியா வந்தார் துருக்கி அதிபர்

துருக்கி அதிபர் எர்டோகன் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார். அவரது மனைவி, அமைச்சர்கள் மற்றும் வர்த்தக குழுவினர் உட்பட 100-க்கும் மேற்பட்டோரும், இந்தியா வந்துள்ளனர். இன்று அவர் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை சந்தித்துப் பேசுகிறார். பின், இரு நாட்டு வர்த்தக அமைப்பின் ஆலோசனைக் கூட்டத்தில் அவர் கலந்து கொள்கிறார்.

Erdogan


மேலும், அவர் பிரதமர் மோடியையும் சந்தித்துப் பேசுகிறார். அப்போது, அணுசக்தி விநியோகிப்பாளர் குழுவில் இந்தியா இணைவது உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, எர்டோகன் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியையும் சந்தித்து உரையாட உள்ளார்.


இந்நிலையில் எர்டோகன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "வருங்கால சந்ததியரின் நலனை கருத்தில் கொண்டு, காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். குறிப்பாக, காஷ்மீரில் உயிர் பலிகளை தடுக்க வேண்டும். இதற்காக இந்தியா - பாகிஸ்தான் நாடுகள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அந்த பேச்சுவார்த்தைக்கு நாங்கள் உதவத் தயாராக இருக்கிறோம். எங்களுக்கு இந்தியா, பாகிஸ்தான் இரண்டு நாடுகளுமே நண்பர்கள்தான்" என்றார்.