இந்திய - பாகிஸ்தான் எல்லையில் துப்பாக்கிச்சூடு: 2 ராணுவ வீரர்கள் பலி!

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில், இன்று காலை பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி இந்திய ராணுவத்தினரை நோக்கி ராக்கெட் லான்ச்சர் போன்ற ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு ராணுவத்தினர் கொல்லபட்டனர். 

இதையடுத்து, இந்திய தரப்பு பாகிஸ்தான் ராணுவத்தின் மீது பதில் தாக்குதல் நடத்தியுள்ளது. தொடர்ந்து, இரு தரப்புகளும் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் கூறுகின்றன. இதனால், இந்திய - பாகிஸ்தான் பூஞ்ச் எல்லைப் பகுதியில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. 

நன்றி: ANI

Do you like the story?

Please Appreciate the Author by clapping!