ஐ.எஸ் இயக்கத்துக்கு ஆள் சேர்க்கும் தெலுங்கானா காவல்துறை!

போலி இணையதளம் மூலம் தெலுங்கானா காவல்துறை, ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர முஸ்லிம் இளைஞர்களை ஊக்கப்படுத்துவதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திக்விஜய் சிங்.

digvijaya singh

சர்ச்சைக்குரிய கருத்துக்களை அவ்வப்போது கூறி பரபரப்பை ஏற்படுத்தி வருபவர் திக்விஜய் சிங். கர்நாடகா மற்றும் கோவா மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளராக இருந்த இவர் அண்மையில் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதனிடையே இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் 'ஐ.எஸ் இயக்கத்துக்கு தெலுங்கானா போலீஸ் ஆள் சேர்ப்பதாக' பதிவிட்ட கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து தனது ட்விட்டர் பதிவில்,' தெலுங்கானா காவல்துறையினர் போலி இணையதளம் மூலமாக இஸ்லாமிய இளைஞர்களை ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர ஊக்கப்படுத்துவதாகவும், இதற்கு பொறுப்பேற்று தனது பதவியை முதலமைச்சர் சந்திரசேகர ராவ் ராஜினாமா செய்வாரா' எனக் கேள்வி எழுப்பியுள்ளார். இதையடுத்து, தெலுங்கானா காவல்துறையின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில்,' ஆதாரமற்ற குற்றச்சாட்டை ஒரு மூத்த அரசியல் தலைவர் முன்வைப்பது, தேச விரோத சக்திகளுக்கு எதிராக போராடி வரும் காவல்துறையை கலங்கப்படுத்துவதாக உள்ளது' எனக் கூறப்பட்டுள்ளது.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!