உச்சநீதிமன்றம் உத்தரவு எதிரொலி! அதிரடிகாட்டினார் நீதிபதி கர்ணன்

உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏழு பேருக்கும் உடனடியாக மனநல மருத்துவ பரிசோதனை செய்யப்பட வேண்டுமென கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் உத்தரவிட்டுள்ளார்.

நீதிபதி கர்ணன்

கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணனுக்கு மனநல பரிசோதனை நடத்தப்பட வேண்டுமென உச்சநீதிமன்றம் இன்று காலை உத்தரவிட்டிருந்தது. இதற்கு பதிலடி தரும் விதமாக உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்குதான் மனநல மருத்துவ பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என பதில் உத்தரவு பிறப்பித்துள்ளார் நீதிபதி கர்ணன்.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏழு பேருக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார். மேலும், தனக்கு விதிக்கப்பட்ட பரிசோதனைக்கு தான் உட்படப்போவதில்லை என்றும் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

முன்னதாக நீதிமன்றத்தை அவமதிப்பு செய்ததாக நீதிபதி கர்ணன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதற்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் மீது தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்து அவர்களது பாஸ்போர்டை முடக்கவும் உத்தரவிட்டிருந்தார்.

இவ்வாறு உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கும் உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணனுக்கும் இடையே மாறிமாறி வழக்குகள் தொடரப்பட்டும், உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டும் வருவது குறிப்பிடத்தக்கது

Do you like the story?

Please Appreciate the Author by clapping!