'இந்தியாவின் நிலை... ஒளிமயமான எதிர்காலம்...' - நெகிழும் மோடி!

ஐ.எஃப்.எஸ் என்று கூறப்படும் இந்திய வெளியுறவு சேவைப் பணிக்கு தேர்வு செய்ப்பட்டுள்ள 41 இளம் அதிகாரிகளை இன்று டெல்லியில் சந்தித்து உரையாடினார் பிரதமர் நரேந்திர மோடி.

அப்போது அதிகாரிகள் மத்தியில் பேசிய மோடி, 'உலக நாடுகள், இந்தியாவுக்கு ஒளிமயமான எதிர்காலம் இருப்பதாக நம்புகிறது. மேலும், இந்தியாவின் வளரும் நிலை அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. வெளியுறவு சேவையில் இருப்பவர்களுக்கு ஒரு விஷயத்தைப் பற்றி பரந்துப்பட்ட பார்வை இருக்க வேண்டும். அவர்களுக்கு உலகளாவிய சிந்தனை இருக்க வேண்டும்' என்று பேசியுள்ளார். 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!