உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு பிடிவாரண்ட்! நீதிபதி கர்ணன் அதிரடி

உச்சநீதிமன்ற நீதிபதிகள்  ஏழு  பேருக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து, நீதிபதி கர்ணன் உத்தரவிட்டுள்ளார்.

கர்ணன்

சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்தவர், சி.எஸ்.கர்ணன். இவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் பதிவுசெய்யப்பட்டு, நேரில் வந்து விளக்கம் அளிக்க உச்சநிதிமன்றம் உத்தரவிட்டது. ஆஜராகாத கர்ணன் மீது உச்சநீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. இதையடுத்து,கொல்கத்தா நீதிமன்றத்தில் உச்சநீதிமன்ற நீதிபதிகளை ஆஜராகச் சொல்லி, கர்ணன் உத்தரவு பிறப்பித்தார்.

இதனிடையே, கர்ணனுக்கு மனநலப் பரிசோதனை நடத்தப்பட வேண்டுமென உச்சநீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தது. இதற்குப் பதிலடிதரும் விதமாக, உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்குத்தான் மனநல மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட வேண்டும் எனப் பதில் உத்தரவு பிறப்பித்தார், நீதிபதி கர்ணன். இந்த நிலையில், கொல்கத்தா நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஆஜராகாததால், ஏழு பேருக்கும் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார், நீதிபதி கர்ணன். மேலும், இவர்களது பாஸ்போர்ட்டை முடக்கியுள்ள கர்ணன், ஏழு நீதிபதிகளுக்கும் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளார்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!