1.5 கோடி ரூபாயுடன் வருமான வரித்துறை ஆணையர் கைது! | Income tax Director arrested over bribery case

வெளியிடப்பட்ட நேரம்: 11:49 (03/05/2017)

கடைசி தொடர்பு:20:28 (03/05/2017)

1.5 கோடி ரூபாயுடன் வருமான வரித்துறை ஆணையர் கைது!

தனியார் நிறுவனம் ஒன்றிடம் இருந்து 19 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டின்பேரில், வருமான வரித்துறை ஆணையர் ராஜேந்திர பிரசாத் என்பவரை சி.பி.ஐ. கைது செய்துள்ளது.

கைது

விசாகப்பட்டினத்தில் வருமான வரித்துறை ஆணையருடன் மற்றொரு நபரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மும்பையைச் சேர்ந்த மேலும் 5 பேரைப் பிடித்து விசாரணை நடத்தி வருவருவதாகவும் சி.பி.ஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

லஞ்சப்புகாரின் பேரில் ராஜேந்திர பிரசாத் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் நடத்திய சோதனையின்போது ஒரு கோடியே 40 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் தனியார் நிறுவனத்திற்கு சாதகமாகச் செயல்படும் நோக்கில் அந்த நிறுவனத்திடம் இருந்து 19 லட்சம் ரூபாயை பிரசாத், லஞ்சமாகப் பெற்றதாக தெரியவந்துள்ளது. தொடர்ந்து சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.