பாகிஸ்தான் தூதரை நேரில் வரவழைத்து இந்தியா கடும் கண்டனம்

பாகிஸ்தான் ராணுவ வீரர்களால் இந்திய வீரர்களின் தலை துண்டிக்கப்பட்டதுக்கு, பாகிஸ்தான் தூதருக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில், பாகிஸ்தான் ராணுவ வீரர்களின் அத்துமீறிய தாக்குதலில் இரண்டு இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இருவரது தலைகளையும் பாகிஸ்தான் வீரர்கள் துண்டித்ததுடன், அவர்கள் உடல்களையும் சிதைத்துவிட்டுச் சென்றனர். இதையடுத்து, இந்திய ராணுவத்தின் சார்பில் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன. உரிய முறையில் பதிலடி கொடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

 இந்த விவகாரம் குறித்து, பாகிஸ்தான் தூதருக்கு இந்தியா கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித்தை நேரில் அழைத்து, இந்தியா  கண்டனம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் அரசிடம் உரிய முறையில் இந்தியாவின் கண்டனத்தைத் தெரிவிக்குமாறு அப்துல் பாசித்திடம் கூறப்பட்டிருக்கிறது. பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதலுக்கு இந்தியா பதிலடி தர வேண்டும் எனப் பல கட்சிகள் வலியுறுத்திவருவது குறிப்பிடத்தக்கது.    

Do you like the story?

Please Appreciate the Author by clapping!