இப்படி ஆலங்கட்டி மழை அடித்தால்.. எப்படி குடை பிடிக்க..!

கேரளாவின் வயநாடு பகுதியில், ஆலங்கட்டி  மழை பெய்து, சிறு சிறு ஐஸ் கட்டிகள் சாலைகளை அலங்கரிக்கும் புகைப்படம் சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

vayanad hailstrom
 

வயநாடு பகுதியில் கடந்த திங்கள்கிழமை திடீரென ஆலங்கட்டி மழை பெய்துள்ளது. கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஆலங்கட்டிகள் கொட்டியுள்ளன. அங்குள்ள சாலை, வீட்டின் மேற்கூரை ஆகியவை பனிக்கட்டிகளால் மூடப்பட்டுவிட்டன. கேரளாவில் கோடைக்காலத்தில் ஆலங்கட்டி மழை பெய்வது வழக்கமான ஒன்றுதான். ஆனால், இம்முறை அதிக அளவு ஆலங்கட்டிகள் கொட்டித் தீர்த்தன. அப்பகுதி மக்கள் ஆலங்கட்டி மழையை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பகிர, சிறிது நேரத்தில் வைரலாகிவிட்டது. கொண்டாட்டங்கள் ஒருபுறம் இருந்தாலும், இம்மழையால் பயிர் செய்யப்பட்டு இருந்த விளைபொருள்கள் பாழாகி உள்ளதாக விவசாயிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர். 

vayanad hailstrom
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!