மதிப்புமிக்க ‘ஏ+’ கிரேடு வாங்கி அசத்திய அழகப்பா பல்கலைக்கழகம்!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்துக்கு என்.ஏ.சி.சி (NACC) 'ஏ+' அங்கீகாரம் அறிவிக்கப்பட்டுள்ளது. என்.ஏ.சி.சி.யின் தேசிய தர நிர்ணய குழுக் கூட்டத்தில் ஏ+ அந்தஸ்து தர முடிவு எடுக்கப்பட்டது. இந்த ஏ+ கிரேடு அந்தஸ்து, அழகப்பா பல்கலைக்கழகத்துக்கு ஏழு ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. மேலும், நிர்ணயக் குழு அழகப்பா பல்கலைக்கழகத்துக்கு 4-க்கு 3.64 புள்ளிகள் அளித்துள்ளது.  

என்.ஏ.சி.சி கமிட்டி, உத்தரகாண்ட் திறந்த நிலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் நாகேஸ்வர ராவ் தலைமையில் அமைக்கப்பட்டது. இவர்கள் பங்கேற்ற தேசிய தர நிர்ணயக்குழு கூட்டத்தில் தமிழ்நாடு மாநில பல்கலைக்கழகங்களில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் ஏ+ கிரேடு பெற்றதாக அறிவித்திருக்கிறது. 

'இந்த விருது கிடைத்திருப்பது பல்கலைக்கழகத்துக்கு மட்டும் பெருமையல்ல. மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள், நிர்வாகத்தினர் என அனைவருக்கும் பெருமை சேர்த்திருக்கிறது' என்றார் அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சுப்பையா.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!