தூய்மையான நகரங்கள் பட்டியலில் பின்னுக்குத் தள்ளப்பட்டது திருச்சி!

தூய்மை இந்தியா திட்டத்தின் சிறந்த தூய்மையான நகரங்களின் தரவரிசைப் பட்டியலில், இந்தூர் முதலிடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு ’டாப்-3’ பட்டியலில் இருந்த திருச்சி மாநகரம் இம்முறை ஆறாம் இடத்துக்குப் பின்தள்ளப்பட்டுள்ளது.

தூய்மை இந்தியா

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் இந்த ஆண்டுக்கான சிறந்த தூய்மையான நகரமாக, ‘இந்தூர்’ தேர்வுசெய்யப்பட்டுள்ளது. மிகவும் மோசமான, தூய்மை குறைந்த நகரமாக, உத்தரப்பிரதேசத்தின் ’கொண்டா’ நகரம், பட்டியலின் கடைசி இடத்தில் உள்ளது. 2014-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட தூய்மை இந்தியா திட்டத்தின் அடிப்படை நோக்கத்தை நிறைவேற்றும் நகரங்களின் பட்டியல் ஒவ்வோர் ஆண்டும் வெளியிடப்படும்.

அதன் அடிப்படையில், இந்தாண்டு சுத்தமான நகரமாக, மத்தியப்பிரதேச மாநிலத்தின் ‘இந்தூர்’ நகரம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில், ’டாப்-10’ நகரங்களுள் தமிழகத்தின் ‘திருச்சி’ மாவட்டமும் இடம்பெற்றுள்ளது. இந்தியாவின் தூய்மையான நகரமாக ஆறாம் இடத்தில் உள்ளது திருச்சி.

கடந்தாண்டு வெளியிடப்பட்ட பட்டியலில், மைசூரு நகரம் முதலிடம் பிடித்தது. ஒவ்வொரு வருடமும் நகரங்களில் அமைந்துள்ள கட்டுமான வளர்ச்சி, சுத்தம், சுகாதாரம், திடக்கழிவு மேலாண்மை, போக்குவரத்து ஆகியவற்றின் அடிப்படையில், சிறந்த சுத்தமான நகரங்களின் பட்டியல் வெளியிடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!