பங்கனப்பள்ளி மாம்பழத்துக்கு புவிசார் குறியீடு!

இந்தியாவின் புகழ்மிக்க மாம்பழ வகையாகக் கருதப்படும் ஆந்திராவின் பங்கனப்பள்ளி மாம்பழத்துக்கு, புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.

மாம்பழம்

முக்கனிகளில் முதன்மையானதும், இந்தியப் பழங்களின் அரசன் என்ற சிறப்பும் பெற்றது மாம்பழம்.  குறிப்பாக, இந்தியாவின் சிறந்த வகை மாம்பழமான பங்கனப்பள்ளி, ஆந்திராவில் அதிகமாக விளைகிறது. இதற்கு, புவிசார் குறியீடு கேட்டு ஆந்திர தோட்டக்கலைத்துறை ஆணையர் விண்ணப்பித்திருந்தார். இந்த விண்ணப்பத்தை ஏற்ற சென்னை புவிசார் குறியீடு மையம், நேற்று குறியீட்டுச் சான்றிதழை வழங்கியது. 

ஆந்திராவின் ராயலசீமா, கர்ணூல் போன்ற பகுதிகளில் அதிக அளவில் விளையும் பங்கனப்பள்ளி, ஒவ்வோர் ஆண்டும்  24.35 லட்சம் மெட்ரிக் டன் உற்பத்திசெய்யப்படுகிறது. ஆந்திரக் கிராமங்களின் முக்கிய விவசாயத் தொழிலாக இருக்கும் பங்கனப்பள்ளி  உற்பத்தி, ஆண்டுக்காண்டு அதிகரித்துக்கொண்டேவருகிறது. நிறைந்த உற்பத்தியால், 5 ஆயிரத்து 500 டன் அளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான் என வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!