’பதஞ்சலி’ பற்றிய பாபா ராம்தேவின் கனவு பலிக்குமா? | Patanjali will be the largest brand in India within two years : Baba Ramdev

வெளியிடப்பட்ட நேரம்: 14:34 (04/05/2017)

கடைசி தொடர்பு:14:34 (04/05/2017)

’பதஞ்சலி’ பற்றிய பாபா ராம்தேவின் கனவு பலிக்குமா?

'இன்னும் இரண்டு ஆண்டுகளில் இந்தியாவின் மிகச் சிறந்த நிறுவனமாக பதஞ்சலி திகழும்' என்று பாபா ராம்தேவ் உறுதியாகத் தெரிவித்துள்ளார். அதற்கான முயற்சிகளைத் தீவிரமாக மேற்கொண்டுவருவதாக அவர் கூறியுள்ளார். 

Baba Ramdev


உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பாபா ராம்தேவ், 'பதஞ்சலி நிறுவனம், கடந்த நிதியாண்டில் 10,561 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. பதஞ்சலி நிறுவனத்தின் தயாரிப்புகள்குறித்து போலியான தகவல்களை சிலர் பரப்புகின்றனர். அனைத்து பொய் விமர்சனங்களையும் உடைத்து, இன்னும் இரண்டு ஆண்டுகளில் இந்தியாவின் மிகச் சிறந்த நிறுவனமாக பதஞ்சலி திகழும். வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் குழந்தைகளுக்கு, பதஞ்சலி நிறுவனம் சார்பாக பள்ளி தொடங்க திட்டமிட்டுள்ளோம். பதஞ்சலி லாபம் ஈட்ட இயங்கிவரும் நிறுவனம் அல்ல. மக்களின் நலன்தான் முக்கியம்', என்று தெரிவித்துள்ளார். 

இன்னும் ஐந்து ஆண்டுகளில் பதஞ்சலி தயாரிப்புகள், வெளிநாட்டு நிறுவனங்களை நாட்டைவிட்டே ஓடவைக்கும்’ என, பாபா ராம்தேவ் சில நாள்களுக்கு முன்னர் சவால் விடுத்தது குறிப்பிடத்தக்கது. பாபா ராம்தேவின் இந்த சவால்குறித்து நெட்டிசன்ஸ் கடுமையாக விமர்சித்துவருகின்றனர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க