வெளியிடப்பட்ட நேரம்: 10:15 (05/05/2017)

கடைசி தொடர்பு:11:17 (05/05/2017)

100 பாகிஸ்தான் வீரர்களின் தலைகளை வெட்டவேண்டும் - பாபா ராம்தேவ் ஆவேசம்!

'இந்திய வீரர் ஒருவரின் தலை வெட்டப்பட்டால், பாகிஸ்தான் வீரர்களின் 100 தலைகள் வெட்டப்பட வேண்டும்' என்று பாபா ராம்தேவ் ஆவேசத்துடன் கூறினார்.

 
பதஞ்சலி என்ற நிறுவனத்தின்மூலம் பாபா ராம்தேவ் ஏராளமான பொருள்களைத் தயாரித்து விற்பனை செய்துவருகிறார். பதஞ்சலி நிறுவனத் தயாரிப்புகள் குறித்து டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், 'பதஞ்சலியின் உற்பத்தித் திறன் தற்போது 30,000 கோடியாக உள்ளது. அடுத்த ஆண்டு முதல் இது 60,000 கோடியாக உயரும். மகாத்மா காந்தி, சந்திரசேகர் ஆசாத் சொன்னதுபோல அயல்நாட்டுப் பொருள்களை நாம் பயன்படுத்தக்கூடாது. சீனப் பொருள்களைப்  புறக்கணிக்க வேண்டும்.

கோல்கேட், யூனிலீவர் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் 50 லட்சம் கோடி வரை முதலீடு செய்துள்ளனர். பிரதமர் மோடியின் ரத்தத்தில் தேசபக்தி ஊறியுள்ளது. 'இந்திய வீரர் ஒருவரின் தலை வெட்டப்பட்டால், பாகிஸ்தான் வீரர்களின் 100 தலைகள் வெட்டப்பட வேண்டும்' என்று தெரிவித்தார்.