வெளியிடப்பட்ட நேரம்: 11:52 (05/05/2017)

கடைசி தொடர்பு:11:58 (05/05/2017)

சேகர் ரெட்டியின் 34 கோடி ரூபாய் சொத்துக்கள் முடக்கம்!?

சேகர் ரெட்டிக்குச் சொந்தமான 34 கோடி ரூபாய் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியதாகத் தகவல் வந்துள்ளது. மேலும், முறையற்ற சொத்துக்களை தங்கக்கட்டிகளாக மாற்றியது அம்பலமாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.  சேகர் ரெட்டியும் சீனிவாச ரெட்டியும் சட்டவிரோதமாக சொத்து சேர்த்தது உறுதியாகியுள்ளதாக, அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

சட்டவிரோதமாக 34 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய ரூபாய் நோட்டுகளைப் பதுக்கிவைத்திருந்ததாக, தொழிலதிபர் சேகர் ரெட்டி மற்றும் அவரின் கூட்டாளிகளான பிரேம்குமார், சீனிவாசலு, திண்டுக்கல் ரத்தினம், புதுக்கோட்டை ராமச்சந்திரன் ஆகியோரை கடந்த  டிசம்பர் மாதம் சிபிஐ கைதுசெய்தது. சேகர் ரெட்டி, சீனிவாசலு, பிரேம்குமார் ஆகியோர்மீது இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ரத்தினம் மற்றும் ராமச்சந்திரன் ஆகியோருக்கு முதலில் நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. 
 
சேகர் ரெட்டி, சீனிவாசலு, பிரேம்குமார் ஆகிய மூவருக்கும் கடந்த மார்ச் 17-ம் தேதி சிபிஐ சிறப்பு நீதிமன்றம்,  நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதையடுத்து, அமலாக்கத்துறை சேகர் ரெட்டியிடம் விசாரணை நடத்தி, அவரைக் கைதுசெய்தது. இந்நிலையில், சேகர் ரெட்டியின் 34 கோடி ரூபாய் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளன.