Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மாநில அரசு நிலம் ஒதுக்குவதில் தாமதம்... கலாம் நினைவிடம் அமைப்பதில் தொய்வு!

Kalam memorial

மக்களின் ஜனாதிபதி, டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் மறைந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைய உள்ளது. ஆனாலும் அவர், மக்களின் மனங்களில் இன்னும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார். அதன் வெளிப்பாடாகத்தான், அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள நினைவிடத்துக்கு, நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து வணங்கிச் செல்கின்றனர். மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் நினைவிடத்துக்கு அடுந்து, கலாமின் நினைவிடத்தைக் காண வரும் மக்கள் எண்ணிக்கையே அதிகம். கோயிலுக்குச் செல்பவர்கள், இது போன்ற உடல் அடக்கம் செய்யப்பட்ட நினைவிடங்களுக்குச் செல்லத் தயங்குவார்கள். ஆனால், கலாம் நினைவிடத்தைக் காண வரும் சுற்றுலாப் பயணிகள், பக்தர்கள், பொதுமக்கள், மாணவர்கள் என அனைவருமே கலாம் நினைவிடத்தை கோயிலாகக் கருதி வந்து வணங்கிச் செல்கின்றனர்.

இந்நிலையில், கலாமின் நினைவிடத்தில் மணிமண்டபம் கட்டும் பணிகளை இந்திய ராணுவ மேம்பாட்டு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தினர் மேற்கொண்டுள்ளனர். ராமேஸ்வரம் செல்லும் சாலையில் பேக்கரும்பு எனும் இடத்தில், சுமார் 3 ஏக்கர் பரப்பளவில்   கடந்த ஓராண்டாக இந்தப்பணி நடந்துவருகிறது. 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைய உள்ள இந்த நினைவு மண்டபத்தில், கலாமின் சிலை, நூலகம், அவர் பயன்படுத்திய பொருள்களின் காட்சிக்கூடம், அறிவு சார் மையம் எனப் பல்வேறு கூடங்கள் அமைய உள்ளன. இதற்கான பணிகளை, கடந்த ஆண்டு ஜூலை 27-ம் தேதி மத்திய அமைச்சர்கள் வெங்கைய நாயுடு, மனோகர் பாரிக்கர் ஆகியோர் துவக்கி வைத்தனர். 

முதல் கட்டமாக, சுமார் 25 ஆயிரம் சதுர அடியில் மணிமண்டபம் அமைக்கும் பணிகள் நடந்துவருகின்றன. உயர் ரக கிரானைட் கற்களால் உருவாக்கப்படும் இந்த மணிமண்டபத்தில், கலாம் விஞ்ஞானியாகப் பணியாற்றிய தருணம், அரிய கண்டுபிடிப்புகளை உருவாக்கிய தருணம், ஜனாதிபதியாகப் பணியாற்றிய காலம், அறிவியல் ஆலோசகராக இயங்கிய காலம் என நான்கு பிரிவுகள்கொண்ட கூடங்களும், அது தொடர்பான புகைப்படங்கள், அவர் பயன்படுத்திய பொருள்கள், கண்டுபிடிப்பின் மாதிரிகள், உடைகள் உள்ளிட்டவை அங்கு இடம் பெற உள்ளன. 

Kalam memorial

இத்துடன், கலாமின் ஏழு அடி உயர வெண்கல சிலையும் அங்கு வைக்கப்பட உள்ளது. கலாமின் 2-ம் ஆண்டு நினைவு தினமான ஜூலை  27-ம் தேதி ராமேஸ்வரத்தில் நடைபெறும் விழாவில், பிரதமர் மோடி திறந்து வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி, பிரதமர் வருகைக்கான பாதுகாப்பு மற்றும் கூட்ட ஏற்பாடுகள் குறித்தும் இப்போதே அதிகாரிகள் அளவிலான ஆலோசனை நடந்துவருகிறது. பிரதமரின் வருகை உறுதி செய்யப்பட்ட பின், இதற்கான முறையான அறிவிப்பு வெளியிடப்படும் எனத் தெரிகிறது. 

 இதனிடையே, கலாமின் நினைவிடப் பணிகளுக்கு என மத்திய அரசு ஆறு ஏக்கர் நிலத்தை மாநில அரசிடம் கோரியிருந்தது. ஆனால், இதுவரை மூன்று ஏக்கருக்கும் குறைவான நிலத்தையே மாநில அரசு வழங்கியுள்ளது. இதனால், கலாம் நினைவிடத்தில் அமைய இருக்கும் அறிவுசார் மையம், தியான மண்டபம், ஆராய்ச்சி தொடர்பான புத்தகங்கள் அடங்கிய நூலகம், ஓய்வுக்கூடம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் அமைவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே, மாநில அரசு கலாம் நினைவிடத்துக்குத் தேவையான எஞ்சிய நிலத்தை வழங்கிட, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கலாமின் பேரன் சலீம், மாநில அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close