வெளியிடப்பட்ட நேரம்: 16:32 (05/05/2017)

கடைசி தொடர்பு:20:11 (05/05/2017)

வெளியேறிய இந்தியாவின் கறுப்புப் பணம் இத்தனை லட்சம் கோடியா? அதிரவைக்கும் தகவல்

இந்தியாவில் இருந்து 2014-ம் ஆண்டிலேயே 1.3 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான கறுப்புப் பணம் வெளிநாடுகளுக்குக் கொண்டு செல்லப்பட்டுவிட்டதாக குளோபல் ஃபைனான்ஸ் இன்டகிரிட்டி (ஜி.எஃப்.ஐ) என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. 

 

சர்வதேச அளவில் நிதி தொடர்பான செயல்பாடுகளைக் கண்காணிக்கும் அமெரிக்காவின் வாஷிங்டன்னைச் சேர்ந்த குளோபல் ஃபைனான்ஸ் இன்டகிரிட்டி (ஜி.எஃப்.ஐ) முதன்முறையாக, சட்டத்துக்குப் புறம்பாகப் பணத்தை வெளிநாட்டுக்குக் கொண்டு செல்வதுடன் உள்ளே நுழையும் பணம் பற்றியும் ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது. 

அந்த ஆய்வறிக்கையின் படி 2014-ம் ஆண்டில் 101 பில்லியன் அமெரிக்க டாலர் (6.5 லட்சம் கோடி ரூபாய்) மதிப்பிலான பணப் பரிமாற்றங்கள் சட்டத்துக்குப் புறம்பாக நடந்திருப்பதாகவும், அதில், 21 பில்லியன் டாலர் (கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் கோடி ரூபாய்) அளவுக்குக் கறுப்புப் பணம் இந்தியாவில் இருந்து வெளியேறிவிட்டது என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், உலக அளவில் வளரும் நாடுகளில் இருந்து 620 முதல் 970 பில்லியன் டாலர் மதிப்பிலான பணம் சட்டத்துக்குப் புறம்பான பணப் பரிமாற்றம் மூலம் மாற்றப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.