தாமதமாயினும் நீதி வென்றது! நிர்பயா தந்தை நெகிழ்ச்சி

பாலியல் வன்முறைக்கு ஆளாகி கொலை செய்யப்பட்ட நிர்பயா வழக்கில் நால்வருக்கு அளிக்கப்பட்ட தூக்குத் தண்டனை தீர்ப்பு தாமதமாக வந்திருந்தாலும் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளதாக நிர்பயாவின் தந்தை கூறியுள்ளார்.

nirbhaya

2012-ம் ஆண்டு டெல்லியில் 'நிர்பயா' என்ற மருத்துவ மாணவியை ஆறு பேர் கொண்ட கும்பல் பேருந்தில் பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து கைது செய்யப்பட்ட ஆறு பேரில் நால்வருக்கு இன்று தூக்குத் தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம். மற்ற இருவர்களில் ஒருவர் 2014-ல் திஹார் சிறையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டார். ஒருவர் வயதின் காரணமாக சிறுவர் சீர்த்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டார்.

இதையடுத்து தீர்ப்பு குறித்து பேசிய நிர்பயாவின் தந்தை, 'இந்த தீர்ப்பு எங்கள் குடும்பத்துக்கு கிடைத்த வெற்றி. இத்தீர்ப்பு தாமதமாக வழங்கப்பட்டிருந்தாலும் இறுதியில் நீதியே வென்றுள்ளது' எனக் கூறினார். மேலும், இதுகுறித்து நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி கூறுகையில், 'இந்த சட்டப்போராட்டத்தில் எங்களுக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மூலம் இது போன்ற மோசமான செயல்களில் ஈடுபட நினைப்பவர்கள் பயம் கொள்வார்கள்' எனக் கூறினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!