Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நேரலையில், அர்ணாப் கோஸ்வாமியின் 'ரிபப்ளிக்' டிவி சேனல்!

arnab

பிரபல ஊடகவியலாளர் அர்ணாப் கோஸ்வாமியால் தொடங்கப்பட்டிருக்கும் 'ரிபப்ளிக்' சேனல், இன்று காலை 10 மணி முதல் நேரலை செய்யப்படுகிறது. தனது அதிரடி வாதத்திறமையாலும், நிகழ்ச்சி நடத்தும் முறையாலும் இந்திய ஊடகத்துறையில் தனக்கென தனி இடம் பிடித்தவர், ஊடகவியலாளர் அர்ணாப் கோஸ்வாமி  'டைம்ஸ் நவ்' தொலைக்காட்சியின் ஆசிரியராகப் பணியாற்றியிருக்கிறார். அந்த சேனலில் அர்ணாப் தொகுத்து வழங்கிய, 'நியூஸ் ஹவர்' நிகழ்ச்சிக்கு நாடு முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். தன் தொடக்க காலத்தை என்.டி டிவி, டிடி மெட்ரோ சேனல்களில் தொடங்கிய இவர், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 'டைம்ஸ் நவ்' சேனலில் இருந்து விலகினார். 

இந்த நிலையில், 'ரிபப்ளிக்' என்ற புதிய சேனலை இவர் தொடங்க இருப்பதாக 2016-ம் ஆண்டு டிசம்பரில் தகவல் வெளியானது. அதற்கான முதற்கட்ட பணிகள் நடந்துகொண்டிருந்தபோது, 'ரிபப்ளிக்' சேனல்குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை ட்விட்டரில் வெளியிட்டார் அர்ணாப்.  இன்று காலை 10 மணி முதல் 'ரிபப்ளிக்' சேனல் நேரலை செய்யப்பட்டுள்ளது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close