Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கம்யூனிஸ்ட்டும் இல்லை; காங்கிரஸும் இல்லை, என்றுமே பாஜக தான்! அமித்ஷா பெருமிதம்!

திரிபுரா மாநிலத் தேர்தல் நெருங்குவதையொட்டி அம்மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமித்ஷா அடுத்து திரிபுராவிலும் பாஜக தான் வெற்றிபெறும் எனத் தெரிவித்தார்.

அமித் ஷா

திரிபுரா மாநிலத்தின் ஆட்சியில் எப்போதுமே நிலையாக நிற்கும் கம்யூனிஸ்ட் கட்சியை தோற்கடித்து பாஜக ஆட்சியைப் பிடிக்கும் என பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார். மேலும், கம்யூனிஸ்ட் கட்சி என்ற ஒரு கட்சி உலகத்திலேயே இல்லை என்றும் காங்கிரஸ் என்ற கட்சி இந்தியாவிலேயே இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் அமித் ஷா கூறுகையில், ‘இந்திய சுதந்திரத்துக்குப் பின்னர் இந்திய மக்களுக்கு மிகவும் பிடித்தத் தலைவராக மோடி உள்ளார். சமீபத்தில் நடந்த பல மாநில தேர்தல் முடிவுகளே இதற்கு சாட்சி. பாஜக ஆட்சியையே மக்கள் விரும்புகின்றனர்’ எனத் தெரிவித்தார். குறிப்பாக பாஜக வடகிழக்குப் பகுதிகளில் தன்னுடைய பலத்தை நிலைநிறுத்த ஆர்வம் காட்டிவருகிறது. இதை முன்னிட்டே அமித் ஷாவின் திரிபுரா பயணம் அமைக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close