சுத்தமான இடத்தை ஏன் யோகி மீண்டும் சுத்தம் செய்கிறார். இவங்களுக்கு இதே வேலையா போச்சு!!! நெட்டிசன்ஸ் நக்கல்

உத்திரப்பிரதேசத்தை தூய்மையான மாநிலமாக முன்னெடுக்கும் முயற்சியில், முதல்வர் யோகி ஆதித்யநாத்  துடைப்பம் பிடித்து பலூ அடார் பகுதி தெருக்களை பெருக்கி சுத்தம் செய்தார்.

 Yogi Adityanath
 

’தூய்மை இந்தியா’ திட்டத்தின் கீழ், நாட்டின் தூய்மையான மற்றும் அசுத்தமான நகரங்களின் பட்டியலை அண்மையில் மத்திய அரசு வெளியிட்டது. அந்த பட்டியலில்,  முதல் 100 நகரங்கள்  உத்தரப்பிரதேச மாநிலத்தின் வாரணாசி நகர் மட்டுமே இடம்பெற்றிருந்தது.  

இதனால் யோகி ஆதித்யநாத் அப்சட் ஆகி, அதிகாரிகளை உடனடியாக மாநிலத்தை தூய்மையாக்கும் பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.  அதன் துவக்கமாக, உபியின் பலூ அடார் பகுதிக்கு இன்று காலை அதிகாரிகளுடன் சென்ற யோகி ஆதித்யாநாத், அங்குள்ள தெருக்களை துடைப்பம் பிடித்து சுத்தம் செய்துள்ளார். அங்குள்ள பொதுமக்களிடம் பேசிய யோகி,  ’தூய்மை இந்தியா திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்’, என்று கேட்டு கொண்டாராம். அதுமட்டுமன்றி லக்னோ நகரம் ஏன் இவ்வளவு அசுத்தமாக இருக்கிறது என்று அதிகாரிகளிடம் அதிருப்தியை வெளிபடுத்தியுள்ளார். 

யோகி ஆதித்யநாத் தெருக்களை சுத்தம் செய்யும் புகைப்படம் அவரின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டிருந்தது. அந்த புகைப்படத்தில் யோகி சுத்தம் செய்யும் தெரு ஏற்கெனவே சுத்தமாக தான் இருப்பதாக நெட்டிசன்ஸ் கிண்டல் செய்து வருகின்றனர். முன்னர் பிரதமர் நரேந்திர மோடி தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தெருக்களை சுத்தம் செய்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி கடும் விமர்சனத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!