வங்கி கொள்ளை பயம்... காஷ்மீர் வங்கிகள் அதிரடி அறிவிப்பு!

காஷ்மீரில் அண்மையில் நடக்கும் வங்கிக் கொள்ளை காரணமாக பாதுகாப்பற்ற பகுதிகளில் பணப் பறிமாற்றம் நிறுத்தப்பட்டுள்ளது.

காஷ்மீர்

காஷ்மீரில் சில தினங்களுக்கு முன்பு ஜே&கே வங்கிக்குச் சொந்தமான பணம் ஏற்றிச்செல்லும் வேனில், பயங்கரவாதிகள் அதிரடித் தாக்குதல் நடத்தி கொள்ளையடித்தனர். இதில் ஐந்து போலீஸார், இரண்டு வங்கி ஊழியர்களைப், பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர். இதைத் தொடர்ந்து புல்வாமா மாவட்டத்தில் அமைந்துள்ள ஜம்மு- காஷ்மீர் வங்கியில் கொள்ளையடித்தனர்.

இதையடுத்து ஜம்மு- காஷ்மீரில் பாதுகாப்பற்ற இடங்களில் உள்ள வங்கிகளில் பணப் பரிமாற்ற சேவை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. புல்வாமா, குல்காம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 40-க்கும் மேற்பட்ட வங்கிகளில் பணப் பறிமாற்றம் நிறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து புல்வாமா காவல்துறை ஆணையாளர் கூறுகையில்,' காஷ்மீரில் அமைதியற்ற சூழலை ஏற்படுத்திவரும் தீவிரவாதிகள், தங்கள் நிதி தேவைக்காக வங்கிகளை குறிவைக்கத் தொடங்கியுள்ளனர். இதையடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காக இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக' அவர் கூறியுள்ளார். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!