Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

10 அமைச்சர்கள் ராஜினாமா... இன்று புதிய அமைச்சர்கள் பதவியேற்பு : ஒடிசா அரசியல் பரபர..!

ஒடிசாவில், 10 அமைச்சர்கள் ராஜினாமா செய்தனர்.

Odisha


ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், அம்மாநில அமைச்சரவையை மாற்றியமைக்க முடிவு செய்துள்ளார். இதையடுத்து, ஒடிசா சட்டசபை சபாநாயகர் நிரஞ்சன் பூஜாரி, கடந்த சில  தினங்களுக்கு முன் தனது பொறுப்பை ராஜினாமா செய்தார். தொகுதி பணியை பார்க்க செல்வதாகக் கூறி அவர் ராஜினாமா செய்தார்.


இந்நிலையில், அமைச்சர்கள் சஞ்சய் தாஸ்வர்மா, அருண் குமார் சாஹு, பிரதீப் பாணி கிரஹி, புஷ்பேந்திர சிங் தேவ், பிரகாஷ் தாஸ் உட்பட, பத்து அமைச்சர்கள் ராஜினாமா செய்தனர். 


இது குறித்து நவீன் பட்நாயக் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''கட்சி பணிக்காக உழைக்க, தானாக முன்வந்து, அமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்தவர்களுக்கு நன்றி. குறிப்பாக, அமைச்சரவை மாற்றம் மக்களுக்கு சிறப்பான பலனை அளிக்கும்'' என்றார்.


இதற்கிடையே ஒடிசாவில் 11 புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்க உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், ஒடிசா அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement