குஷ்பூ இட்லி தெரியும்... யோகி மாம்பழம் தெரியுமா!?

உத்தரப்பிரதேசத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மாம்பழத்துக்கு உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

யோகி

உத்தரப்பிரதேசத்தில் மாம்பழ ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருபவர் ஹாஜி கலிமுல்லா. வெவ்வேறு மாம்பழங்களை கலந்து ஹைபிரிட் மாம்பழங்களை இவர் தயாரித்து வருகிறார். இதுவரை தான் தயாரித்த மாம்பழங்களுக்கு சச்சின், ஐஷ்வர்யா ராய், மோடி என இவர் பெயரிட்டு வந்தார். இதனிடையே இவரது தோட்டத்தில் புதிதாக உருவாகியுள்ள ஹைபிரிட் மாம்பழத்துக்கு 'யோகி மாம்பழம்' என பெயர் சூட்டியுள்ளார்.

இது குறித்து ஹாஜி கலிமுல்லா கூறுகையில், 'சமீபத்தில் எனது தோட்டத்துக்கு வந்த மக்களிடம் இந்த புதிய மாம்பழத்துக்கு என்ன பெயர் வைக்கலாம் எனக் கேட்டேன். அவர்கள் தான் யோகியின் பெயரை பரிந்துரை செய்தனர். அதனால், இப்பெயரையே வைத்து விட்டேன். நிச்சயமாக இது நல்ல சுவை மிகுந்த மாம்பழமாக இருக்கும்' என்கிறார் அவர். மேலும், இதுவரை மாம்பழத்தை ருசி பார்த்து பெயர் வைத்த கலிமுல்லா, யோகி மாம்பழத்தை இப்போது வரை ருசிக்கவில்லையாம். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!