வெளியிடப்பட்ட நேரம்: 19:27 (07/05/2017)

கடைசி தொடர்பு:11:48 (08/05/2017)

#BREAKING 'தொடர் குண்டுவெடிப்புகள் நடக்கும்'.. இந்திய ரயில்நிலையங்களுக்கு ஐ.எஸ் மிரட்டல்!

நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களுக்கு இ-மெயில் மூலம் ஐஎஸ் பயங்கரவாதிகள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.

isis

இந்தியா முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் தொடர் வெடிகுண்டு தாக்குதல் நடத்துவோம் என ஐ.எஸ். பயங்கரவாதிகள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் பெயரில் வந்த இ-மெயிலில் இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. வரும் ஜுன் மாதம் முதல் தொடர் குண்டுகள் வெடிக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து ரயில்வே ஊழியர்கள் மிகுந்த விழிப்பு உணர்வுடன் இருக்க ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

சந்தேகப்படும்படியான நபர்கள் பற்றி உடனடியாக ஆர்.பி.எஃப் மற்றும் ரயில்வே போலீஸாரிடம் பயணிகள் எந்நேரமும் புகார் அளிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து இந்தியாவில் உள்ள முக்கிய ரயில்வே முனையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், ஐ.எஸ் அமைப்பினர் பெயரில் வந்துள்ள இந்த மிரட்டல் இ-மெயில் குறித்து தீவிர விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. அதன் உண்மைத்தன்னை பற்றியும் ஆராயப்பட்டு வருகிறது.