ஒரு ரூபாய்க்கு மருத்துவ சேவை: வியக்க வைக்கும் மும்பை ரயில் நிலையங்கள்

ரயில் போக்குவரத்தின்போது பாதிக்கப்படுபவர்களுக்கு உடனடி மருத்துவ சேவை அளிக்க மத்திய ரயில்வே துறையின் புதிய முயற்சியாக மும்பை ரயில் நிலையங்களில் மருத்துவ மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ரயில்


மத்திய ரயில்வேயின் சார்பில் 24 மணி நேரமும் இயங்கும் ’அவசர கால மருத்துவ அறைகள்’ மும்பையின் ஐந்து ரயில் நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ளன. ரயில் விபத்துகளுக்கு மருத்துவ உதவி அளிக்கப்படவே இம்மருத்துவ மையங்கள் அமைக்கப்பட்டாலும், பொது மக்களும் ஒரு ரூபாய்க்கு மருத்துவ சேவைகளைப் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே ஆர்வலர் ஒருவர் தாக்கல் செய்த பொதுநல வழக்கின் எதிரொலியாகவே ரயில் நிலையங்களில் மருத்துவ மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றை விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவர தீவிரமாகச் செயல்பட்டு வருவதாக ரயில்வே துறையினர் தெரிவிக்கின்றனர்.

இதற்காக ஒவ்வொரு மையத்திலும் 24 மணி நேரமும் 3-4 மருத்துவர்கள் வரையில் பணியில் இருப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவசர சிகிச்சைக்குத் தேவையான அத்தனை மருத்துவக் கருவிகளும் ரயில் நிலையங்களில் அமைத்துள்ளனர். இத்திட்டத்துக்கு பல நிலைகளிலிருந்தும் பாராட்டுகள் வருகின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!