ஜூலை முதல் தேதியிலிருந்து அமலுக்கு வரும் ஜிஎஸ்டி வரி!

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட  ‘ஜிஎஸ்டி மசோதா’ ஜூலை 1-ம் தேதியிலிருந்து அமலுக்கு வரும் என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்துள்ளார்.

அருண் ஜெட்லி


புதிதாக அமலுக்கு வரவிருக்கும் ’பொருள்கள் மற்றும் சேவைகள் வரி’ என்றழைக்கப்படும் ஜிஎஸ்டி மசோதாவால் விலை உயர்வு ஏதும் இருக்காது என்றபோதிலும் சில சேவை வரிகளின் கட்டணம் உயர்த்தப்படும் என அருண் ஜெட்லி கூறியுள்ளார்.

சுதந்திரத்துக்குப் பின்னர் இந்திய விற்பனை வரித்துறையில் ஏற்படும் மிகப்பெரிய மாற்றமே ஜிஎஸ்டி வரி விதிப்பு. ஜிஎஸ்டி என்பது ஒற்றைச் சந்தை முறையில் நாடு முழுவதற்குமான ஒரே வர்த்தக வரி விதிப்பாகும். செப்டம்பர் மாதம் வரை கால அவகாசம் இருக்கும்போது ஜூலை முதல் தேதியிலிருந்து இறுதி செய்யப்பட்ட ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை பின்பற்றப்பட வேண்டும் என மத்திய அரசு முயன்றுவருவதாக ஜெட்லி தெரிவிக்கிறார்.

அமலுக்கு வரும் ஜிஎஸ்டி வரிவிதிப்பால் பணவீக்கம் ஏற்படுமா என்ற கேள்விக்கு, ‘பணவீக்கம் போன்ற நிலை ஏற்படாது. புதிய திட்டம் என்பதால் இடைப்பட்ட தாக்கங்கள் ஏற்படலாம். ஆனால், இந்த வரிவிதிப்பின் மூலம் வர்த்தகம் பெருகும், வரி வசூல் அதிகரிக்கும்’ என பத்திரிகையாளர்களுக்கு ஜெட்லி பேட்டியளித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!