இரோம் சர்மிளாவுக்கு தமிழகத்தில் திருமணம்..!

'மணிப்பூரின் இரும்புப் பெண்மணி' என்று அழைக்கப்படுபவர், இரோம் சர்மிளா. குறிப்பாக, அங்குள்ள ஆயுதப் படை சிறப்புச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 2000-ம் ஆண்டு நவம்பர் 2-ம் தேதி முதல், கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் 9-ம் தேதி வரை போராட்டத்தில் ஈடுபட்டார். பிறகு, போராட்டத்தை முடித்துக்கொண்டு அரசியல் கட்சியைத் துவங்கினார். கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற மணிப்பூர் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டார்.

Irom Sharmila


இதற்காக, மிகவும் உற்சாகமாக அவர் மக்களைச் சந்தித்து வந்தார். தேர்தலில் வெற்றிபெற்றுவிடுவோம் என்று மிகவும் நம்பிக்கையில் இருந்தார் இரோம். ஆனால், தேர்தல் முடிவுகள் அதிர்ச்சியளிக்கும் வகையில் இருந்தன. மிகவும் குறைந்த வாக்குகளே பெற்றதால், அவர் பொது வாழ்வில் இருந்து விலகி, ஓய்வெடுத்துவருகிறார்.


இந்த நிலையில்,  45 வயதாகும் இரோம் சர்மிளா, இங்கிலாந்தில் வசிக்கும் தமது நீண்ட கால நண்பரான டெஸ்மாண்ட் கவுடின்ஹோவை விரைவில் திருமணம் செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, அவரது திருமணம், வரும்  ஜூலை மாதம் தமிழகத்தில் நடக்க உள்ளதாகத்  தகவல்கள் வெளியாகியுள்ளன.


தற்போது, இரோம் சர்மிளா மதுரை அருகே ஒரு கிராமத்தில் ஓய்வெடுத்துவருவதாகக் கூறப்படுகிறது. மேலும், அவரது நண்பர் டெஸ்மாண்ட் கவுடின்ஹோவும்  தற்போது இந்தியாவில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!