வெளியிடப்பட்ட நேரம்: 20:15 (08/05/2017)

கடைசி தொடர்பு:10:31 (09/05/2017)

இனி ஒவ்வொரு அரைமணி நேரத்திலும் நெஃப்ட் பரிவர்த்தனை கிளீயர்..!

வங்கிகளில் மின்னணு முறையிலான பணப் பரிவர்த்தனை, தேசிய மின்னணு நிதி மாற்றல் (நெஃப்ட்) மூலமாக மேற்கொள்ளப்படுகிறது. தற்போது இதில் செய்யப்படும் பரிவர்த்தனை, வேலை நாள்களில் காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை, ஒரு மணி நேர இடைவெளியில் கிளீயர் செய்யப்பட்டுவருகின்றன. இந்த நிலையில், நெஃப்ட் சேவையைத் துரிதப்படுத்த ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.

NEFT


இதைத் தொடர்ந்து, அரை மணி நேர இடைவெளியில் நெஃப்ட் பரிவர்த்தனைகளின் தொகுப்பை கிளீயர் செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி 8.30, 9.30, 10.30, 11.30, 12.30, 1.30, 2.30, 3.30, 4.30, 5.30, 6.30 ஆகிய நேரங்களிலும் பரிவர்த்தனைகள் கிளீயர் செய்யப்பட உள்ளன. அதாவது, ஒரு நாளில் 23 முறை, நெஃப்ட் பரிவர்த்தனைகள் கிளீயர் செய்யப்பட உள்ளன.


இந்த முறை, ஜூலை 10-ம் தேதி முதல் நடைமுறைக்குவருகிறது. இந்த நிலையில், ஜூலை 10-ம் தேதி முதல் இந்த முறையைப் பின்பற்ற வேண்டும் என்று வங்கிகளுக்கு, ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.