ஆந்திராவில் செய்தியாளர்களின் குழந்தைகளுக்கு சிறப்புச் சலுகை..!

'அரசால் அங்கீகரிக்கப்பட்ட செய்தியாளர்களின் குழந்தைகளுக்கு, கல்விக் கட்டணத்தில் 50 சதவிகிதம்  சலுகை அளிக்கப்படும்' என்று ஆந்திர அரசு அறிவித்துள்ளது. 


ஆந்திராவில், காட்சி ஊடகம், அச்சு ஊடகங்களில் பணியாற்றும் புகைப்படக் கலைஞர்கள், செய்தியாளர்களின் பிள்ளைகளுக்கான கல்விக் கட்டணத்தில், தனியார் பள்ளிகளில் 50 சதவிகிதம் சலுகை அளிக்கும் விதமாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அரசின் ஆணைப்படி, அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்கள்,  தனியார் பள்ளிகளுக்கு  அரசின் உத்தரவை நிறைவேற்ற உத்தரவு பிறப்பித்துள்ளனர். அந்தச் சலுகையை இந்தக் கல்வி ஆண்டு முதலே நடைமுறைப்படுத்தவும் ஆந்திர அரசு உத்தரவிட்டுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!