நிறுத்துங்கள்! ராபர்ட் வதேரா கொந்தளிக்கக் காரணம் என்ன? | Robert Vadra slams media!

வெளியிடப்பட்ட நேரம்: 14:35 (10/05/2017)

கடைசி தொடர்பு:14:43 (10/05/2017)

நிறுத்துங்கள்! ராபர்ட் வதேரா கொந்தளிக்கக் காரணம் என்ன?

'பத்திரிகையாளர்கள் தன் தாயாரைப் பின்தொடர்வதை நிறுத்த வேண்டும்' எனக் காட்டமாக ஃபேஸ்புக்கில் பதிவுசெய்துள்ளார் ராபர்ட் வதேரா.

ராபர்ட் வதேரா


சோனியா காந்தியின் மருமகனும் பிரியங்காவின் கணவருமான ராபர்ட் வதேரா, தன்னுடைய தாயாரை தொடர்ந்து பின்தொடரும் பத்திரிகையாளர்களைக் கடுமையாகச் சாடியுள்ளார். முன்னணி பத்திரிகைகள் சில, ராபர்ட் வதேராவின் தாயார் மாரின் வதேரா குடியிருக்கும் டெல்லி சொகுசுப் பங்களாவில், கடந்த காங்கிரஸ் ஆட்சியில் இருந்து 13 ஆண்டு காலமாக டெல்லி போலீஸார் பணியமர்த்தப்பட்டு இருப்பது குறித்து தொடர் செய்திகள் வெளியிட்டு வந்தன.

இந்நிலையில் தன் தாயார் குறித்து வெளிவரும் செய்திகளால் ஆத்திரமடைந்த வதேரா, ‘என் தாயரைப் பின்தொடர்வதை நிறுத்துங்கள். மூத்த வயதுடையோரை தொடர்ந்து தொந்தரவு செய்வதை நிறுத்த வேண்டும்’ என தன் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவுசெய்துள்ளார்.

மேலும், ‘எனக்கு கொடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்தையும் நீக்கிவிடுங்கள். அளவீடுகள் எதுவானாலும், என் அபாயங்களை நானே பார்த்துக்கொள்கிறேன். ஆனால், சிறிதளவாவது நல்லொழுக்கம் பேண வேண்டும். இதழியல் துறையின் மிக மோசமான பக்கத்தைப் பார்க்கிறேன்’ எனக் குறிப்பிட்டிருந்தார்.