வெளியிடப்பட்ட நேரம்: 17:27 (10/05/2017)

கடைசி தொடர்பு:17:24 (10/05/2017)

டிஜிட்டல் மயமாகிறது உச்சநீதிமன்றம்: பிரதமர் மோடி தொடக்கிவைத்தார்!

உச்சநீதிமன்றத்தின் ஒருங்கிணைந்த வழக்கு மேலாண்மை அமைப்பின் முதல் முயற்சியான ’டிஜிட்டல் மயமாக்குதல்’ திட்டத்தினை பிரதமர் மோடி இன்று தொடக்கிவைத்தார்.

உச்சநீதிமன்றம்


உச்சநீதிமன்றம் காகிதங்கள் இன்றி டிஜிட்டல் மயமாகவிருக்கிறது. இந்த சீரிய முயற்சியினை பிரதமர் நரேந்திர மோடியுடன் தலைமை நீதிபதி ஜகதீஷ் சிங் கேஹர், சட்டத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், இதர உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆகியோர் இணைந்து  தொடக்கி வைத்தனர். இப்புதிய முறையின் மூலம் வழக்கு தொடுப்பவர்கள் இனி வருங்காலங்களில் தங்கள் வழக்கு நிலவரம் குறித்து ஆன்லைனிலேயே தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

’கட்டுக்கட்டாக வழக்குகளின் கோப்புகள் நிறைந்து காணப்படும் நிலை இனி இல்லை. இது ஒரு சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத முயற்சியும் கூட’ என உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஜகதீஷ் சிங் கேஹர் தெரிவித்தார். இதனால் இனிமேல் உச்சநீதிமன்றத்தில் எந்தவொரு அச்சடிக்கப்பட்ட கோப்புகளுக்கு இடமில்லை என்பது தெரிய வருகிறது.

இப்புதிய திட்டத்தினை உச்சநீதிமன்றத்துடன் இணைந்து 24 உயர்நீதிமன்றங்களும், அதன் கிளை மன்றங்களும் பின்பற்றும் என்றும் ஒவ்வொரு மத்திய, மாநில அரசுத்துறைகளும் இதே முறையை பின்பற்ற வேண்டும் எனவும் தலைமை நீதிபதி கூறினார்.