Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இரண்டாவது தடவையாக இலங்கை செல்கிறார் பிரதமர் மோடி!

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நாளை இலங்கை செல்லவிருக்கிறார். 2015-ம் ஆண்டுக்குப் பின்னர் மோடி இலங்கை செல்கிறார்.

மோடி

கௌதம புத்தரின் பிறந்தநாளான ‘வேசக்’ தினத்தை முன்னிட்டு, அத்திருவிழாவின் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கிறார் பிரதமர் மோடி. மே மாதம் 12ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை  ஐ.நா சபையின் சர்வதேச மாநாடும் இலங்கையில் நடைபெறவிருப்பதால் இந்த இரண்டு நாள் சுற்றுபயணத்தை மோடி திட்டமிட்டுள்ளார். மாநாட்டுக்கு 100 நாடுகளில் இருந்து 400-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர்.

இந்தியப் பிரதமர் இலங்கையின் ‘வேசக்’ தினத்தில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கவிருப்பதை இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் சஞ்சய் பாண்டா உறுதிசெய்துள்ளார். அதிகாரபூர்வ பேச்சுவார்த்தை எதுவும் மேற்கொள்ளத் திட்டமிடப்படவில்லை என்றபோதும் இலங்கையின் முக்கிய அரசியல் தலைவர்களுடன் மோடி உரையாற்றுவார் என இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது.

இரண்டு வருடங்களுக்குப் பின்னரான பிரதமர் மோடியின் வருகை இருநாட்டு உறவினையும் மேலும் வலுப்படுத்தும் என்று நம்புவதாக சஞ்சய் பாண்டா தெரிவித்தார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close