Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

’ஆம் ஆத்மி கட்சியில் காலம் தள்ளுவது கடினம்’.. விலகிய மாநிலத் தலைவர்!

’ஆம் ஆத்மி’ கட்சியின் முன்னாள் பஞ்சாப் மாநிலத் தலைவர் குர்பீத் சிங், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக இன்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அறிவித்தார்.

குர்பீத் சிங்

படம்: Panjab Tribune

சர்ச்சைகளும், குழப்பங்களும் சில காலமாகவே ‘ஆம் ஆத்மி’ கட்சியின் பிரிக்கமுடியாத இணைப்பாகவே இருந்து வருகிறது. இந்நிலையில், கட்சியின் பஞ்சாப் மாநிலத் தலைவராக முன்னர் பதவி வகித்த குர்பீத் சிங் கட்சியின் அத்தனை தொடர்புகளிலிருந்தும் விலகுவதாக இன்று வெளிப்படையான அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

ஆம் ஆத்மி கட்சியின் பஞ்சாப் மாநிலத் தலைவராக பகவாந்த் மான் என்பவர் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டாம் நாளிலேயே, முன்னாள் மாநிலத் தலைவர் குர்பீத் சிங் கட்சியிலிருந்து விலகியிருப்பது கட்சியின் உட்கட்சிப் பூசல்களை மேலும் அதிகப்படுத்துவதாகவே உள்ளது. நியாயமற்ற முறையில் நடத்தப்படும் கட்சித் தேர்தல்கள், கட்சிக்காகப் பணியாற்றுபவர்களுக்கு உரிய மதிப்பில்லை என பல குற்றச்சாட்டுகளை முன்னிலைப்படுத்தி, இனியும் கட்சியில் இருப்பது கடினம் எனக் கட்சியிலிருந்து விலகியுள்ளார் குர்பீத் சிங். முன்னதாக, கடந்த திங்கட்கிழமை கட்சியின் முக்கியத் தலைவர் சுக்பால் சிங் கட்சியிலிருந்து விலகினார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close