வெளியிடப்பட்ட நேரம்: 21:42 (10/05/2017)

கடைசி தொடர்பு:12:27 (11/05/2017)

கெஜ்ரிவாலை கோத்துவிட்டவருக்கு கன்னத்தில் பளார்!

அரவிந்த் கெஜ்ரிவால் லஞ்சம் வாங்கியதாக, அவர் மீது குற்றம் சாட்டிய கபில் மிஷ்ரா இன்று ஆம் ஆத்மி ஆதரவாளரால் தாக்கப்பட்டுள்ளார்.

கபில்

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் 2 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியதாக அவரது கட்சியிலிருந்து நீக்கப்பட்ட கபில் மிஷ்ரா குற்றம் சாட்டினார். மேலும் கெஜ்ரிவால் உள்ளிட்ட ஆம் ஆத்மி தலைவர்கள் மீது அவர் குற்றம் சாட்டி, தனது இல்லத்தின் அருகில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். ஆம் ஆத்மி தலைவர்கள் தங்கள் வெளிநாட்டு சுற்றுலா விவரங்களை வெளியிட வேண்டும் என அவர் வலியுறுத்தி வருகிறார்.

இதனிடையே இன்று உண்ணாவிரதப் போராட்டத்தின்போது கபில் மிஷ்ரா தாக்கப்பட்டுள்ளார். அன்கித் பரத்வாஜ் என்பவர் கபில் மிஷ்ரா கன்னத்தில் பலமாகத் தாக்கியுள்ளார். இதையடுத்து கபில் மிஷ்ராவின் ஆதரவாளர்கள் அவரைப் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர். இதனிடையே தாக்குதலில் ஈடுபட்ட அன்கித் பரத்வாஜ் பாஜக இளைஞரணியைச் சேர்ந்தவர் என ஆம் ஆத்மி தலைவர் சஞ்சய் சிங் கூறியுள்ளார். இதையடுத்து டெல்லி அரசியல் சூழல் பரபரப்பாகியுள்ளது.