Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஒடிசாவில் பிறந்த குட்டி பாகுபலி!

’பாகுபலி’ ஃபீவர் யாரையும் விட்டுவைக்கவில்லை என்பதற்கான சமீபத்திய உதாரணம், ஒடிசாவில் ஒரு உயிரியல் பூங்காவில் பிறந்த புலிக்குட்டிக்கு ‘பாகுபலி’ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

புலிக்குட்டி

Representative image

தெலுங்கு திரைப்பட உலகில் மட்டுமின்றி உலகம் முழுவதும் வெளியான அத்தனை மொழிகளிலும், இடங்களிலும் வசூல் சாதனை புரிந்த திரைப்படம் ‘பாகுபலி’. உடை, உபயோகப் பொருள்கள் என அத்தனையிலும் பாகுபலி காய்ச்சல் வெளிப்பட்டு வந்த நிலையில் ஐசிஐசிஐ வங்கி அவர்களின் ஏடிஎம் கார்டில் ‘பாகுபலி’ திரைப்படக் காட்சிகளை அச்சடித்து வழங்கியது.

தற்போது, இவற்றை எல்லாம் தாண்டி ஒரு படி மேலேயே சென்றுள்ளது ஒடிசாவில் நடந்த சம்பவம். ஒடிசாவில் உள்ள நந்தன்கன் உயிரியல் பூங்காவில் புதிதாகப் பிறந்த புலிக்குட்டிக்கு ‘பாகுபலி’ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்தப் பெயர் சூட்டுவிழா ஒடிசாவின் காடுகள் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் பிஜய்ஸ்ரீ ரெளத்ராய் தலைமையில் நடைபெற்றது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement