Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ராஜஸ்தானில் திருமண மண்டபம் இடிந்து விழுந்து விபத்து - 26 பேர் பலி..!

ராஜஸ்தான் மாநிலம் பர்தாபூர் மாவட்டத்தில் திருமண மண்டபத்தின் சுவர் இடிந்து விழுந்து நான்கு குழந்தைகள் உள்பட 26 பேர் பலியாகினர். மேலும், காயமடைந்த 28 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 


ராஜஸ்தான் மாநிலம் பர்தாபூர் மாவட்டத்தில் திருமண மண்டபம் உள்ளது. அந்தத் திருமண மண்டபத்தின் சுவர் சுமார் 90 அடி நீளமும் 12 அடி உயரமும் கொண்டது. அந்தச் சுற்றுச் சுவரை ஒட்டியவாறு தகரக் கூரை அமைக்கப்பட்டிருந்தது. திருமணத்துக்காக சுவரை ஒட்டிய பகுதியில் உணவு விடுதி அமைக்கப்பட்டிருந்தது. நேற்று திடீரென அந்தப் பகுதியில் அடித்த புயல் காற்றின் காரணமாக அந்தச் சுற்றுச் சுவரும் தகரக் கூரையும் சரிந்து விழுந்தன. இதன் காரணமாக ஏற்பட்ட விபத்தில் 26 பேர் உயிரிழந்தனர்.

அதில் நான்கு குழந்தைகளும் அடக்கம். மேலும் 28-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அவர்களில் 15-க்கும் மேற்பட்டோர் ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. பர்தாபூர் மாவட்டத்தில் நடைபெற்ற சம்பவம் மிகவும் வலியை ஏற்படுத்தியது என்று பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா இரண்டு லட்ச ரூபாயும் காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் அறிவித்துள்ளார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close