ஆதார் - பான் இணைக்க புதிய வசதி அறிமுகம்!

ஆதார் எண்ணை, பான் கார்டுடன் இணைக்க புதிய இணையதள வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Aadhaar

அடிப்படை சேவைகள் பெற ஆதார் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, பான் கார்டு பெறுவதற்கு மற்றும் வருமான வரி தாக்கல்செய்வதற்கு, ஆதார் எண்ணைக் கட்டாயமாக்கும் நடைமுறையை முன்மொழிந்துள்ளது மத்திய அரசு. வரும் ஜூலை 1-ம் தேதி முதல், மேற்குறிப்பிட்ட இரண்டுக்கும் ஆதார் எண் கட்டாயம் ஆக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், ஆதார் எண்ணுடன் பான் கார்டை இணைப்பதற்காக, புதிய இணையதள வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது வருமானவரித்துறை. அதன்படி, இனி இணையதளத்தின் மூலமே எளிமையான முறையில் ஆதாருடன் பான் கார்டை இணைக்கலாம்.  https://incometaxindiaefiling.gov.in  என்ற இணையதளத்தில், ஆதார் மற்றும் பான் கார்டு எண்ணைக் கொடுத்து. பின் கேட்கப்படும் விவரங்களை பூர்த்தி செய்து ஆதாருடன் பான் கார்டை இணைக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!