Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நடிகை ரம்யாவுக்கு புதிய பொறுப்பு கொடுத்தார் ராகுல்காந்தி!

காங்கிரஸின் கட்சியின் தகவல்தொழில்நுட்ப பிரிவுத் துறையின் தலைவராக நடிகையும் லோக்சபா முன்னாள் எம்.பியுமான ரம்யா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 


நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியைத் தழுவியது. இதனையடுத்து காங்கிரஸில் மாற்றம் கொண்டு வரும் முயற்சியில் கட்சித் தலைமை ஈடுபட்டுள்ளது. பா.ஜ.கவைப் பொறுத்தவரையில், தகவல் தொழில்நுட்ப பிரிவு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. மோடியைப் பற்றிய பெருமிதமான தகவல்களை பரப்புவதிலும், பா.ஜ.கவுக்கு எதிரான கருத்துகளுக்கு சமூக வலைதளங்களில் பதிலடி கொடுப்பதிலும் அந்தக் கட்சியின் ஐ.டி அணி தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

அதேபோல் காங்கிரஸின் தகவல் தொழில்நுட்ப பிரிவை பலப்படுத்த ராகுல்காந்தி அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். அதன் முதற்கட்டமாக, அந்தப் பிரிவுக்குத் தலைவராக இருந்த தீபிந்தர்சிங் ஹூடாவை நீக்கிவிட்டு நடிகை ரம்யாவை நியமித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் இணையத்தளத்தையும், அதன் ட்விட்டர் பக்கத்தையும் வலுப்படுத்தும் பொறுப்பு ரம்யாவுக்கு அளிக்கப்பட்டுள்ளது. ட்விட்டரில் பா.ஜ.க செயல்பாடுகளுக்கு பதிலடி கொடுக்கும் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது. நடிகை ரம்யாவின் ட்விட்டர் பக்கத்தை மட்டும் சுமார் 5 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close