Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தேர்தல் ஆணையத்தில் பன்னீர்செல்வம் அணியின் அடுத்த அதிரடி..! அதிர்ச்சியில் எடப்பாடி அணி

தேர்தல் ஆணையத்தில், 12,600 பக்க கூடுதல் பிரமாணப்பத்திரம் தாக்கல். தொண்டர்களின் கையெழுத்துடன் பிரமாணப்பத்திரத் தாக்கல் செய்தது, ஓ.பி.எஸ் அணி.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், சசிகலா பொதுச் செயலாளர் ஆனார். பிறகு, முதல்வர் பதவியில் இருந்த ஓ.பன்னீர் செல்வத்துக்கும் சசிகலாவுக்கும் மோதல் வெடித்தது. தொடர்ந்து, இரண்டு அணிகளாக உடைந்தது அ.தி.மு.க. சில         எம்எல்ஏ-க்களும் கட்சியின் மூத்த நிர்வாகிகளும் ஓ.பி.எஸ் பக்கம் தாவ, எம்எல்ஏ தரப்பில் பலர் சசிகலா பக்கம் சென்றனர். இந்த நிலையில், சசிகலா சிறை, தினகரனுக்குப் பதவி என காட்சிகள் மாறின. தேர்தல் ஆணையத்தால் 'இரட்டை இலை' சின்னமும் முடக்கப்பட்டது. 

Panneerselvam faction

இதைத் தொடர்ந்து, டி.டி.வி தினகரனும் சிறைக்குச் செல்ல, இரு அணிகளும் இணைவதற்கான முயற்சிகள் நடைபெற்றுவருகின்றன. இரட்டை இலைச் சின்னத்தைப் பெறுவதற்காக, இரு அணிகளும் பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகின்றன. இதையடுத்து, இரட்டை இலைச் சின்னத்துக்கு உரிமை கோரி, கடந்த மாதம், ஓ.பன்னீர்செல்வம் அணியினர் தேர்தல் ஆணையத்தில் கூடுதலாக  6,500 பக்கங்கள்கொண்ட பிரமாணப்பத்திரத்தைத் தாக்கல்செய்திருந்தனர். 

இந்நிலையில், பன்னீர்செல்வம் அணி சார்பாக தேர்தல் ஆணையத்தில் இன்று, தொண்டர்களும் நிர்வாகிகளும் கையெழுத்திட்ட 12,600 பிரமாணப்பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்தப் பிரமாணப்பத்திரங்களை மனோஜ் பாண்டியன் தாக்கல்செய்தார். இரட்டை இலைச்  சின்னத்துக்காக, பன்னீர்செல்வம் அணி சார்பாக, ஏற்கெனவே 20,000 பிரமாணப்பத்திரங்கள் தாக்கல்  செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இரு அணிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தைக்கான முயற்சிகள் நடைபெற்றுவரும் நிலையில், பன்னீர்செல்வம் அணியின் இந்த நடவடிக்கை, எடப்பாடி பழனிசாமி அணியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close